போதைப்பொருள் கடத்தல் மன்னன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டு

~ Translation in Tamil by Shankar Selvam based on original story published on 20 March 2012 ~

யோங் உய் கோங்கின் வழக்கறிஞரான திரு ரவிக்கு வரையப்பட்ட பதில் கடிதத்தில், மேல் வழக்காடுமன்றம் திரு ஜீயா ஜூன் லெங் மீது மேலும் இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. திரு ஜீயா போதைப் பொருள் கூட்டணி தலைவனாகத் திரு யோங் வழக்கில் கருதப்படுகிறான்.

இரண்டு குற்றச்சாட்டுகளும் யோங்குக்குத் நேரடியாகத் தொடர்புடையன அல்ல என்று குற்றவழக்குத் தொடர்வு இதுவரையில் வெளிப்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது.

யோங்கின் வழக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் புதுத் திருப்பத்தில், ஜீயா எந்த அளவுக்குக் குற்றத்திற்குரிய நபர் என்று இந்தப் போதைப்பொருள் கூட்டணியைப் பொறுத்தமட்டில் தெளிவாகிறது.

மரண தண்டனைக்கு நிகரான அளவு எரோயின் கடத்திய குற்றத்திற்கு ஜீயா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருள்களை ஜீயா, கோ பாக் கியாங் என்ற நபருக்குக் கடத்தி வழங்கியுள்ளான். கோ பாக் கியாங்குக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிக்கையில் வெளியான ஒரு அரசுப் பதிவுரான செய்தி.

கோவுக்கு வழங்கிய தீர்ப்பில், வட்டார நீதிபதி வாங் கீன் ஊன், கோ, ஜீயாவின் உத்தரவின்பேரில் செயல்பட்டுள்ளதாகவும் ஜீயா கோவை, தனது மற்றும் தனது மனைவி  ஜெசியின் சொந்த வேலைகளுக்குச் செயல்பட வேலைக்கு வைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்சொந்த வேலைகள் சிறிதளவு போதைப்பொருள் கொடுத்தல் வாங்குதல் வேலைகளை உள்ளடக்கும்.

மேலும் நீதிபதி வாங், ஜீயா ஒரு கூட்டணியில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜீயாவும் அவனும் மனைவியுமே இக்கூட்ணிக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு உத்தரவுகளை வழங்கும் நபர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிடாத காரணங்களுக்காக ஜீயா, தனது மீது சுமத்தப்பட்ட இவ்விரு மற்றும் இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கும் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.

யோங், மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டில், ஜீயாவை வைத்து ஒப்பிடுகையில் தனக்கு இழைக்கப்பட்ட ஏறுமாறான நடத்துமுறையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேல்வழக்குமன்றத்தில்தொடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாதத்தில், திரு ரவி, சிங்கப்பூர் அரசியலமைப்புப் பிரிவுக் கூறு பன்னிரண்டின்படி, யோங்குக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும், குற்றவழக்குத் தொடர்வு,  போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தொடுத்துள்ள இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காண போதைப்பொருள் கூட்டணித் தலைவனாகச் செயல்பட்டிருக்கக்கூடிய ஜீயாவுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாக்கத் தடுப்புக்காவலுக்கும் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது யோங்கின் சம உரிமை நடத்துமுறைக்கு எதர்மறையாக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

குற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள இருபத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தத் தயக்கம் காட்டியுள்ளதைத் திரு ரவி குறிப்பிட்டுள்ளார். யோங் மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டுக்கும் ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லாமையைக் குற்றவழங்குத் தொடர்வு நிலைநாட்டியுள்ளதைக் அவர்களது இந்த நோக்கு, குறுகலான குறைகூறத்தக்க நிலையைக் காட்டியுள்ளதைத் திரு ரவி வெளிப்படுத்தியுள்ளார். ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள், குற்றக்கடுஞ்செயல்களில் அவனுக்குக் கோவைவிட உள்ள குறைகூறத்தக்க நிலையைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

யோங் தாக்கல் செய்த தற்போதைய விண்ணப்பத்தில்,குற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள யோங் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகள் தேவையான தடயங்கள் இல்லாத காரணத்தின்பேரில் விலக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. யோங்கின் மீது மூலத்தனக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதற்கான காரணத்தை நியாயப்படுத்தவும் குற்றவழக்குத் தொடர்வு மறுத்துவிட்டனர். ஆனால், ஜீயாவுக்கு மூலத்தனக் குற்றச்சாட்டு இல்லை.

தப்பித்துவிட்டவன்

கோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கடுமைத்துவம், அவன் ஜீயாவுக்கு எதிராக வழங்கிய வாக்குமூலத்தின்பேரில் குறைக்கப்பட்டது; கோ, 14.99 கிராம் டைமோவின் (14.99 grams of diamorphine) கடத்திய குற்றத்திற்காகக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினான். ஆனால், அவன் குற்றவழக்குத் தொடர்வுக்கு அனுகூலமான சாட்சியாகச் செயல்பட்டதை நீதிபதி பெருமளவு கருத்திற்கொண்டார்.

இது யோங்குக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. அவனது வாதத்தின்படி அவன் ஜீயாவுக்கு எதிராக வாக்குமூலம் தரக்கூடிய முக்கிய வலுக்கட்டாயமான சாட்சி. அவன் தனக்குச் சாதகமாக இருக்கக்கூடிய நிலைகளில் ஜீயாவுக்கு எதிராகச் சாட்சி தரத் தயாராக இருந்தான். நீதிபதி மன்றத்தில் பகிரங்கமாகச் சாட்சி கூறத் தயக்கம் காட்டியது தனது குடும்ப நலனைக் கருத்திற்கொண்டதாலே ஆகும் என்றும் அவன் வலியுறுத்தினான்.

இந்த வாதத்தின் அடிப்படையில் கோவுக்கு வழங்கப்பட்டு, அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட வாய்ப்பை, யோங்குக்கும் குற்றவழக்குத் தொடர்வு வழங்கியிருக்கலாம். குற்றவழக்குத் தொடர்வு இந்த வாய்ப்பை யோங்குக்கு வழங்காதது ஏற்புடையதன்று. இதற்குக் காரணம் பொதுநல கொள்கையின்பேரில் கூட்டணியின் சற்று மேல்நிலையில் உள்ள ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.  

காவலர்களுக்கு வழங்கிய வாக்குமூலங்களில் யோங், ஜீயாவையே தனது முதலாளி என்றும் அவனே தனக்குப் போதைப்பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வர விநியோகம் செய்ததாகக் கூறினான். வழக்கு விசாரணையின்போதும், யோங் ஜீயாவைத் தனது முதலாளி என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறான்.

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள்மேலும் பல கேள்விகளை உருவாக்குயுள்ளதையும் அவற்றிக்குக் குற்றவழக்குத் தொடர்வு இன்னும் சரிவர பதிலளிக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.

குற்றவழக்குத் தொடர்வு, ஜீயாவுக்கு எதிராக, போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. கோவின் வழக்கு மூலம் அவர்களுக்குக் கிடைத்த கண்டுபிடிப்புகள் ஜீயா, கூட்டணியின் மேல் உச்சத்தில் செயல்பட்டியிருக்கிறான் என்பது போதுமான ஆதாரங்கள். இதனை யோங்கின் வாக்குமூலம் வைத்து ஒப்புநோக்கையில், ஜீயாவுக்கு எதிராக, யோங்கின் வழக்கில்,குற்றவாளியென முடிவு செய்ய முடியும்.

ஜீயாவுக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் எதிர்வாதத் தரப்பிற்கு வெளிபடுத்திய அடியெடுப்பின்மூலம்குற்றவழக்குத் தொடர்வு தொடர்ந்து ஜீயாவின் மீதுள்ள இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவனுக்கும் தொடர்பற்ற நிலையைப் பறைசாற்றுவது எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத ஒன்றாகும்.

மேல்வழக்குமன்றமே குற்றச்சாட்டுகளைத் தொடர்புபடுத்தி வெளியிடும்போது, குற்றவழக்குத் தொடர்வு செய்யக்கூடாதா?


The original article titled 'Court reveals two more charges against alleged druglord in Yong Vui Kong case' was written exclusively for TOC by 'We Believe in Second Chances'.
_________________________

For just US$7.50 a month, sign up as a subscriber on Patreon (and enjoy ads-free experience on our site) to support our mission to transform TOC into an alternative mainstream press in Singapore.
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments