There are lots of unanswered questions in the riot of Little India and for the sake of the deceased, those arrested and injured, witnesses must bravely come forward to speak the truth.
Write in to us at our email at [email protected] if you have any source of information.

தேக்காவில் முண்ட திடீர் கலவரத்திற்கு காரணம் என்ன?

~ இரவிச்சந்திரன்

8ஆம் தேதி டிசம்பர் மாதம் தேக்காவில் நடந்த திடீர் கலவரம் குறித்த செய்தி பலரும் அறிந்ததே. ஆயினும் இந்தக் கலவரத்த்திற்கு என்ன காரணம் என்று இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.

அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் அப்படி ஆவேசம்படும்படி விபத்தில் மாண்ட சக்திவேல் குமாரவேலுக்கு என்ன நடந்தது?

சக்திவேல் மதுபோதையில் இருந்ததால் அவர் பஸ்ஸில் தகராறு செய்ததாகவும், அதனால் பஸ் ஓட்டுனர் அவரை பஸ்ஸிலிருந்து கீழே இரக்கும்படி பஸ் உதவியாளரிடம் கூறியதாகவும், சக்திவேல் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும்முன்பு தன் காற்சட்டையை கழுற்றியதாகவும் ஒரு செய்தித்தகவல் கூறுகிறது. அதே தகவல் சக்திவேல் பஸ்ஸிலிருந்து இறங்கியபின், பஸ் புறப்பட்டபோது, அதே பஸ்ஸில் அடிபட்டு பஸ்ஸின் இடது பின் டயருக்கு அடியில் கிடந்தார் என்றும் கூறுகிறது.

எப்படி இந்த விபத்து நடந்தது? இந்த விபத்து நடக்கும்முன் சக்திவேல் பஸ் ஓட்டுனராலும், உதவியாளராலும் எப்படி நடத்தப்பட்டார்? விபத்து நடந்தபின் பஸ்ஸில் ஏற்கனவே இருந்த வேறு பிரயாணிகளுக்கு என்ன ஆயிற்று? இவர்களும் கலவரத்தில் ஈடுபட்டனரா?

கலவரத்தின்பொது பஸ்ஸையும் அரசாங்கத்தின் அவசர வாகனங்களையும் சேதப்படுத்தியவர்கள் ஏன் அங்கிருந்த கடைகளையும், வேறு வாகனங்களையும், போது உடைமைகளையும் சேதப்படுத்தவில்லை? கலவரம் நடந்த இடத்தில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களைத்தவிர்த்து வேறு நாட்டினரும் இருந்தனர். இவர்கள் என் தாக்கப்படவில்லை? கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என் குறிப்பாக போலீஸ்ஸையும், தனியார் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் குடிமை தற்காப்பு அதிகாரிகளை மட்டும் தாக்கினர்?

இவ்வித கேள்விகளுக்கு பதில்காண அரசாங்கம் ஒரு விசாரணைக் கமிஷனைக் கூட்டியுள்ளது. சில அமைச்சர்களும், செய்தித்தாள்களும், நடந்த கலவரத்திற்கு மதுபானம் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னபோதும் கலவரத்தை ஒட்டியுள்ள கேள்விகள் பதில் அவளவு சுலபமானவை இல்லை என்பதையே புலப்படுத்துகின்றன.

விபத்தில் இறந்த சக்திவேலுக்கும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு கைதானவர்களுக்கும், கலவரத்தில் காயப்பட்ட எல்லோருக்கும் நல்ல தீர்வுகிடைக்க கலவரத்தைக் கண்ட சாட்சிகள் உண்மையை சொல்ல தைரியமாக முன் வரவேண்டும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
You May Also Like

KPIs should motivate Town Councils to serve better

KPIs are not excuses to make life difficult for residents. Leong Sze Hian

SM Goh’s misdirected attack on the press

Reporter not at fault to quote PAP cadre – even anonymously. Choo Zheng Xi

“Effectively a dictatorship”

How else do we describe a government [which] prohibits public speech and…